கோவையில் நடந்த இந்தியாவின் முதல் டைனஸ்டி பிக்கிள்பால் லீக் பிரம்மாண்ட நிறைவு!
கோயம்புத்தூரில் உள்ள ST Sportz இண்டோர் மைதானத்தில், இந்தியாவின் மிகப்பெரிய பிக்கிள்பால் தொடரான TNDPL சீசன் 1 வெற்றிகரமாக நடைபெற்றது. 100 வீரர்கள் மற்றும் 10 அணிகள் பங்கேற்ற இத்தொடரை, முதன்மை ஆதரவாளர் மற்றும் கார் பந்தய சாம்பியன் பாலபிரசாத், திரைப்பட இயக்குநர் என். கிருஷ்ணா உள்ளிட்ட பல பிரபலங்கள் நேரில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இரண்டு நாட்கள் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த லீக் போட்டியின் இறுதி ஆட்டத்தில், கவுதம் தலைமையிலான செம்மொழி எம்பயர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. சந்தீப் தலைமையிலான பல்லவா டைட்டன்ஸ் அணி இரண்டாம் இடத்தை (Runner-up) கைப்பற்றியது. இந்திய பிக்கிள்பால் வரலாற்றில் முத்திரை பதித்துள்ள இத்தொடர், அடுத்த சீசனில் இன்னும் பிரம்மாண்டமாக மீண்டும் வரும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்