மாணவர்கள் உருவாக்கிய இந்தியாவின் முதல் மனித சக்தி நீர்மூழ்கிக் கப்பல் அறிமுகம்...
கோவையில் கல்லூரி மாணவர்கள் இந்தியாவின் முதல் மனித சக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் புதிய தலைமுறை மின்சார பந்தயப் படகை உருவாக்கி சாதனை படைத்தியுள்ளனர்.
இவை சர்வதேச கடல்சார் பொறியியல் போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்க உள்ளன.
கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் இணைந்து உருவாக்கிய இந்தத் திட்டங்கள், கடல்சார் தொழில்நுட்பத்தில் புதிய சாதனையாகக் கருதப்படுகின்றன.
'டீம் இன்கிராஃப்ட்' உருவாக்கியுள்ள மனித சக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல், இங்கிலாந்தில் ஜூன் 29 முதல் ஜூலை 10 வரை நடைபெறும் ஐரோப்பிய சர்வதேச நீர்மூழ்கிக் கப்பல் பந்தயத்தில் (eISR) பங்கேற்க உள்ளது.
அதேபோல், 'டீம் சீ சக்தி' உருவாக்கியுள்ள ஐந்தாம் தலைமுறை மின்சார பந்தயப் படகான ‘யாலி 5.0’, ஜூலை 8 முதல் 11 வரை மொனாக்கோவில் நடைபெறும் மொனாக்கோ எனர்ஜி போட் சேலஞ்ச் (MEBC 2026) போட்டியில் பங்கேற்கிறது. மேம்பட்ட உந்துவிசை தொழில்நுட்பம், பேட்டரி வெப்பக் கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் நவீன ஏரோடைனமிக் வடிவமைப்புகளுடன் இந்தப் படகு உருவாக்கப்பட்டுள்ளது.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்