கேஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான கல்லூரி துவக்க விழா


கோவை கே ஜி கல்லூரியில் ஸ்ரீ கே கோவிந்தசாமி கலையரங்கத்தில் கேஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான கல்லூரி துவக்க விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்கள் தீப ஒளி ஏற்ற விழா இனிதே துவங்கியது. கல்லூரி முதல்வர் முனைவர் S. வித்யா வரவேற்புரையும், கல்லூரிச் செயலர் முனைவர் பா வனிதா தொடக்க உரையினையும் வழங்கினார்கள். இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக மாற்றம் அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் Mr. J சுஜித் குமார் கலந்துகொண்டார். சுய முயற்சி, தன்னம்பிக்கை, தனித் திறன்களை மேம்படுத்தல் மற்றும் சிறந்த வழிகாட்டுதலைப் பெறுதல் ஆகியவற்றின் மூலம் எவ்வாறு இலக்குகளை அடைய முடியும் என்று அரங்கம் நிறைந்த மாணவர்களையும், பெற்றோர்களையும் கவரும் வண்ணம் தமது ஆளுமை நிறைந்த உரையை நிகழ்த்தினார்.கேஜி கலை அறிவியல் கல்லூரியின் பெருமைமிகு முன்னாள் R. (Team lead, Walmart through coforge Ltd chennai.) S. ល់ ឈប់ (Senior Tax Manager E & Y Bangalore) R. (Automation developer Assa Abloy, Chennai.) ஆண்டு மாணவர்களிடம் தங்கள் மதிப்புமிகு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர், மேலும் கல்லூரி அவர்களை வழிநடத்தி வாழ்வின் உயர்வு நிலைக்கு கொண்டு செல்ல எவ்வாறு உதவியது என்பதை தமது சிறப்புரையில் பதிவு செய்தனர். CLSE குழுவினர் தங்கள் சிறப்புமிகு பணிகளையும் பயன்களையும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.
தொழில்நுட்பங்களை KGISL கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் முனைவர் அசோக் பக்தவத்சலம் தனது தலைமை உரையில் மாணவர்கள் வளர்ந்து வரும் கையாளும் ஆற்றல் உடையவர்களாக தங்களை தகவமைத்துக் கொள்ள வேண்டும் என்றும் தான் பெற்ற திறன்களை சமூக வளர்ச்சிக்கு வித்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். KGISL கல்விக் குழுமத்தின் வருங்கால முன்னெடுப்புகளுக்கான இயக்குநர் திரு.அத்விக் கோவிந் அசோக் சிறப்புரை வழங்கினார். மேலும் கல்லூரியின் தலைமை நிர்வாக அதிகாரி திரு.அரவிந்த் ராஜேந்திரன் அவர்களும் அனைத்து முதலாம் ஆண்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இவ் விழாவின் நன்றி உரையினை கே ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தேர்வு கட்டுப்பாட்டு இயக்குனர் முனைவர் D.கவிதா வழங்கினார் இந்நிகழ்வில் 25க்கும் மேற்பட்ட பல்வேறு துறைகளில் பயிலவிருக்கும் 1500க்கும் மேற்பட்ட முதலாம் ஆண்டு மாணவர்களுடன் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் என 2500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். நாட்டுப் பன்னுடன் விழா இனிதே நிறைவடைந்தது.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்