ஜே.சி.பி வாடகை உயர்வு: சூலூரில் எர்த் மூவர்ஸ் வேலை நிறுத்த போராட்டம்

ஜே.சி.பி வாடகை உயர்வு: சூலூரில் எர்த் மூவர்ஸ் வேலை நிறுத்த போராட்டம்
டீசல் மற்றும் உதிரிபாகங்களின் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், ஜே.சி.பி (JCB) எந்திரங்களுக்கான வாடகையை உயர்த்தக் கோரி, சூலூரில் உள்ள அனைத்து ஜே.சி.பி உரிமையாளர்களும் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து சூலூர் எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் நலச்சங்கம் தலைவர் காடாம்பாடி தங்கராஜ் செய்தியாளர்களிடம் பேசும்போது,
தற்போது டீசல் விலை, எந்திரங்களின் உதிரிபாகங்கள் விலை மற்றும் புதிய வாகனங்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
இதுதவிர, காப்பீடு மற்றும் சாலை வரி போன்ற கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளதால், ஜே.சி.பி எந்திரங்களை பழைய வாடகைக்கு இயக்குவது பெரும் நஷ்டத்தை ஏற்படுத்துகிறது.
இந்த விலைவாசி உயர்வை ஈடுகட்டும் வகையில், வாடகையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது இந்த வாடகை உயர்வை அமல்படுத்த வலியுறுத்தி, ஜூன் 22, முதல் ஜூன் 25,வரை நான்கு நாட்களுக்கு அடையாள வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படுகிறது.
இதன்படி, வேலைநிறுத்தத்திற்குப் பின் மாற்றி அமைக்கப்படும் புதிய வாடகை விகிதத்தின்படி குறைந்தபட்சம் முதல் ஒரு மணி நேரத்திற்கு 3,500 ரூபாயும், அதற்கடுத்த ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கும் 1,500 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக முழுவதும் இந்த போராட்டம் காரணமாக பல கோடி ரூபாய் அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்