முதல்வர் விஜய் பிறந்தநாளை ஒட்டி கோவையில் தவெக சார்பில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு!
தமிழக வெற்றிக்கழக தலைவரும், தமிழக முதல்வருமான விஜய் அவர்களின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு, கோவை சாய்பாபா கோவில் (நாகசாயி மந்தீர்) வளாகத்தில் தவெக கோவை புறநகர் வடக்கு மாவட்டம் சார்பில் சிறப்பு வழிபாடு மற்றும் தங்கத்தேர் இழுக்கும் நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெற்றது.கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் வி. ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த வழிபாட்டில், அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் சாய்பாபா எழுந்தருளி திருக்கோவிலை சுற்றி வந்தார். இதில் திரளான பக்தர்களும், தவெக நிர்வாகிகளும் கலந்து கொண்டு தங்கத்தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்