உலக சைக்கிள் தினம் முன்னிட்டு மெரா யுவா பாரத் சார்பில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி.

உலக சைக்கிள் தினம் முன்னிட்டு மெரா யுவா பாரத் சார்பில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி.

கோயம்புத்தூர் மாவட்டம் மதுக்கரை வட்டாரத்தில், மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மெரா யுவா பாரத் (MY Bharat), கோயம்புத்தூர் சார்பில் உலக சைக்கிள் தினத்தை முன்னிட்டு "Pedal Towards a Greener Future" என்ற கருப்பொருளில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி சிறப்பாக நடைபெற்றது.
ASC Sports Club ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், உடல்நலம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தேசிய நலன் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் நோக்கில் ஏராளமான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கோயம்புத்தூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறையைச் சேர்ந்த ஏ.எஸ். மார்ட்டின் கலந்து கொண்டு சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்தார். மேலும், மெரா யுவா பாரத் கோயம்புத்தூர் மாவட்ட இளைஞர் அலுவலர் விக்னேஷ் ஆதித்தியன் கலந்து கொண்டு இளைஞர்களின் சமூகப் பங்களிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம் குறித்து சிறப்புரையாற்றினார்.இந்நிகழ்ச்சியை தேசிய இளைஞர் தன்னார்வலர் அலெக்ஸ் ஒருங்கிணைத்து வழிநடத்தினார். பேரணியில் பங்கேற்ற அனைவரும் உற்சாகமாக சைக்கிள் பயணம் மேற்கொண்டு, பசுமையான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான விழிப்புணர்வு செய்தியை பொதுமக்களிடம் கொண்டு சென்றனர்."Ride for Health, Ride for Environment, Ride for Nation" என்ற முழக்கத்துடன் நடைபெற்ற இந்த சைக்கிள் பேரணி, இளைஞர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் சமூக நலன் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வெற்றிகரமாக அமைந்தது.
நிகழ்ச்சியின் முடிவில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டதுடன், இதுபோன்ற சமூக நலன் சார்ந்த நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்குமாறு இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்