சூலூரில் அதிமுக செயல் வீரர்கள் கூட்டம்!
சூலூர் தொகுதி அதிமுக செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம், சூலூரில் உள்ள திருமண மண்டபத்தில் எழுச்சியுடன் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் ஏ.வெங்கடாசலம் தலைமை தாங்கினார். கோவை புறநகர் மத்திய மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான முனைவர் செ.ம.வேலுசாமி முன்னிலை வகித்தார்.நிகழ்வில் முன்னாள் அமைச்சர் செ.தாமோதரன் முன்னாள் எம்.எல்.ஏ வி.பி.கந்தசாமி கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் தோப்பு க.அசோகன், சூலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் குமரவேல் ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும் முக்கிய நிர்வாகிகளான கண்ணம்மாள், மணிமேகலை, கருப்புசாமி, செல்லதுரை, குனியமுத்தூர் மதனகோபால், வெள்ளலூர் மருதாச்சலம், தொழிற்சங்கம் துரைசாமி, கார்த்திவேலன், அங்கமுத்து, இருகூர் துரை, A.P.அங்கணன், D.C.குட்டியப்பன், A1.கருப்புசாமி, வராகிப்பாளையம் சசிகுமார் முத்து கவுண்டன் புதூர் சரவணன் உட்பட அனைத்து கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்