எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் கலந்து கொண்ட சிறு குறு மற்றும் நடுத்தர தொழிலாளர்களிடம் கலந்துரையாடல் நிகழ்வு
கோயமுத்தூர் MSME Nex-G மற்றும் சின்னவேடம்பட்டி தொழில்துறை அசோசியேசன் சார்பில் உலக MSME தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கவுண்டம்பாளையம் தொகுதி எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் கலந்துகொண்டு சிறு குறு மற்றும் நடுத்தர தொழிலாளர்களிடம் கலந்துரையாடினார்.
அதனைத் தொடர்ந்து MSME துறையின் வளர்ச்சி, அடிப்படை வசதிகள் மற்றும் அரசுத் திட்டங்கள் குறித்து கலந்துரையாடல்,MSME துறையின் கோரிக்கைகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் அடங்கிய மனுவை தமிழக அரசுக்கு சட்டமன்ற உறுப்பினர் வாயிலாக வழங்குதல்,உறுப்பினர்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் மற்றும் தொழில்துறை தொடர்பான சந்தேகங்கள் பெறுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
*பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தேவகுமார் நாகராஜன்:-*
கோவை மாவட்டத்தில் 50,000-க்கும் மேற்பட்ட MSME தொழில் நிறுவனம் செயல்பட்டு வரும் நிலையில் கவுண்டம்பாளையம் தொகுதியில் 20,000-க்கும் மேற்பட்ட MSME தொழில் நிறுவனங்கள் உள்ளது என்றும் இதில் நேரடியாக ஒரு லட்சம் பேருக்கும் மறைமுகமாக 5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கொடுக்கப்பட்டு வருகிறது அது மட்டும் இல்லாமல் ஆயிரம் கோடி ரூபாய் வரை ஜிஎஸ்டி செலுத்தி வருவதாகவும் மின்சார கட்டணம் அதிகளவில் செலுத்தி வருவதாகவும்
கவுண்டம்பாளையம் தொகுதியில்
மட்டுமில்லாமல் கோவை மாவட்டத்தில் உள்ள MSME தொழில் வளர்ச்சிக்கு கவுண்டம்பாளையம் தொகுதி MLA கனிமொழி சந்தோஷிடம் பல்வேறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் இளைஞர்களுக்கு அதிக வயது வேலைவாய்ப்பு கிடைக்க உறுதுணையாக இருக்கும் என தெரிவித்தார்.
*தொடர்ந்து பேசிய கவுண்டம்பாளையம் தொகுதி MLA கனிமொழி சந்தோஷ்:-*
முதல்வர் விஜய் தலைமையில் நடைபெறும் தவெக ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி அடைந்து வருவதாகவும் MSME கோரிக்கைகளை ஏற்று சட்டமன்றத்தில் பேசப்போவதாகவும் தற்போது மீண்டும் நேரடியாக ஆலோசனை மேற்கொண்டு முதல்வரிடம் இந்த கோரிக்கை வைத்து இவர்களுக்கு உரிய தீர்வு அளிக்கப் போவதாகவும் கவுண்டம்பாளையம் தொகுதியில் உட்கட்டமைப்பை உருவாக்கி சிப்காட் தொடங்க ஆலோசனை செய்து பின்னர் தெரிவிக்கப்படும் என கவுண்டம்பாளையம் தொகுதி எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் தெரிவித்தார்.
முதலமைச்சர் விஜய் கூறியது போல் அவகாசம் கொடுத்தால் அனைத்து பிரச்சினைகளும் வருகின்ற 6 மாதத்தில் முடியும் என உறுதி அளித்தார்.தொடர்ந்து பேசிய
மின்சாரத்துறை அமைச்சர் கூறியது போல் மின் கட்டணம் விலை ஏற்றம் இருக்காது என்றும் அது தொடர வேண்டும் அதே போல நிலைக்கட்டணம் 150 ரூபாயில் இருந்து 75 ரூபாயாக குறைத்து வேண்டும் சோலார்களுக்கு சலுகைகள் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.ஜிஎஸ்டி சம்பந்தமாக அமைச்சர் நிதி அமைச்சர் மற்றும் தொழில்துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் மூன்று மாதத்திற்கு ஒரு முறை ஜிஎஸ்டி சம்பந்தமாக ஆய்வு கூட்டம் நடைபெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். தொழில் துறை அமைச்சரை கோவைக்கு அழைத்து வந்து இது சம்பந்தமாக ஆய்வு கூட்டம் நடத்தி முதல்வருடன் இவர்கள் கோரிக்கையை கொடுத்து நிறைவேற்ற இருப்பதாகவும் கவுண்டம்பாளையம் தொகுதி எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் தெரிவித்தார்.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்