தமிழக வெற்றிக் கழகம் சார்பில் "CM CHAMPIONSHIP TROPHY 2026" கிரிக்கெட் தொடர் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் N.M.சுகுமார் MLA போட்டியைத் துவக்கி வைத்தார்!






தமிழக வெற்றிக் கழகம் சார்பில் "CM CHAMPIONSHIP TROPHY 2026" கிரிக்கெட் தொடர் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் N.M.சுகுமார் MLA டாஸ் போட்டு போட்டியைத் துவக்கி வைத்தார்!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழக முதல்வருமான (மக்களின் விருப்பப்படி) ச. ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தவெக சூலூர் தெற்கு ஒன்றியம் சார்பில் "CM CHAMPIONSHIP Trophy 2026" மாபெரும் கிரிக்கெட் தொடர் (நாக்அவுட் போட்டி) இன்று பட்டணம், நடுப்பாளையத்தில் கோலாகலமாகத் துவங்கியது.இப்போட்டியைச் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட சூலூர் சட்டமன்ற உறுப்பினர் N.M.சுகுமார் MLA அவர்கள், நேரில் வருகை தந்து டாஸ் (Flop/Toss) போட்டு, பேட்டிங் செய்து கிரிக்கெட் போட்டிகளை அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்தார் 
இந்நிகழ்ச்சிக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் சூலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கார்த்திக் காமராஜ் தலைமை தாங்கினார்.
மேலும், கட்சியின் முக்கிய நிர்வாகிகளான இணைச் செயலாளர் இளையராஜா, துணைச் செயலாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
மேலும் இந்த நிகழ்வில்,
செயற்குழு உறுப்பினர்கள் பிரியா, மதன்குமார், அருண், உதயகுமார் மற்றும் பட்டணம் ஊராட்சி கிளைச் செயலாளர் அருண் ஆகியோர் கலந்துகொண்டனர். நாயக்கம்பாளையம் கிளைச் செயலாளர் குமரன்
. பட்டணம் ஊராட்சி நிர்வாகிகள் ஜான், சனோஜ், ஆயிஷா, சுதிக்ஷ்ணா, தேவிகா, ரிஷி.நவீன் ஆகியோரும், பீடம்பள்ளி ஊராட்சி செயலாளர் மகேந்திரன், நடுப்பாளையம் கிளைச் செயலாளர் ஆனந்த், பீடம்பள்ளி ஊராட்சி நிர்வாகி சஞ்சய் ஆகியோர் திரளாகப் பங்கேற்றனர்.
மேலும், கருமத்தம்பட்டி நகரச் செயலாளர் சுந்தர், முக்கிய நிர்வாகிகள் செந்தில், கௌதம், ஒன்றிய செயலாளர்கள் நவீன் குமார், அக்ஷயா பிரகாஷ், தமிழ்ச்செல்வன், கண்ணம்பாளையம் பேரூராட்சி செயலாளர் குமார் மற்றும் IT Wing மணி உள்ளிட்ட தவெக பொறுப்பாளர்கள், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இப்போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் பரிசாக ₹5001 + கோப்பை, இரண்டாம் பரிசாக ₹3001 + கோப்பை, மூன்றாம் பரிசாக ₹2000 + கோப்பை மற்றும் நான்காம் பரிசாக ₹1000 + கோப்பை வழங்கப்பட உள்ளது. மேலும் சிறந்த பேட்ஸ்மேன், சிறந்த பந்துவீச்சாளர் மற்றும் ஆட்டநாயகன் விருதுகளும் வழங்கப்பட உள்ளன.

சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்