EDEN CHARITABLE TRUST சார்பில் பள்ளி குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது



EDEN CHARITABLE TRUST சார்பில் பள்ளி குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

ஜூன் 4ம் தேதி பள்ளிகள் திறக்கபட உள்ள நிலையில் பலரும் பள்ளிக்கு தேவையான உபகரணங்களை வாங்கி வருகின்றனர். அதே சமயம் ஏழை எளிய குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள் பள்ளி உபகரணங்களை வாங்குவதற்கு சிரமப்படும் நிலையில் பல்வேறு தனியார் அமைப்புகள் டிரஸ்டிகள் ஆகியவை அந்த குழந்தைகளுக்கு பள்ளி உபகரணங்களையும் சீருடைகளையும் வழங்கி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவையில் இயங்கி வரும் EDEN CHARITABLE TRUST சார்பில் பள்ளி குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. பள்ளிக்குத் தேவையான எழுது பொருள்கள் உட்பட தேவையான உபகரணங்கள் இந்த நிகழ்வில் வழங்கப்பட்டன. 

 சிங்காநல்லூர் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்வில் vitae International மேனேஜிங் டைரக்டர் டேனியல் விக்டர், PSG மருத்துவமனை இருதய மருத்துவர் முருகன், கயகாலிஜிஸ்ட் சரஸ்வதி சக்தி, serve India Charitable Trust மேனேஜிங் டிரஸ்டி பீட்டர் ஆனந்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பள்ளி குழந்தைகளுக்கு இந்த உபகரணங்களை இலவசமாக வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்