கோவை MSME தின விழா: சட்டமன்றத்தில் பேசப்படும் என எம்.எல்.ஏ உறுதி

உலக MSME தினத்தை முன்னிட்டு, கோயமுத்தூர் MSME Nex-G மற்றும் சின்னவேடம்பட்டி தொழில்துறை அசோசியேசன் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் கலந்து கொண்டு தொழில்துறையினரின் கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.முன்னதாகப் பேசிய தேவகுமார் நாகராஜன், "கவுண்டம்பாளையம் தொகுதியில் உள்ள 20,000-க்கும் மேற்பட்ட MSME நிறுவனங்கள் மூலம் 6 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. இத்துறையின் வளர்ச்சி மற்றும் மின்கட்டணக் குறைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை எம்.எல்.ஏ-விடம் வைத்துள்ளோம்" என்றார்.
தொடர்ந்து பேசிய எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ், "MSME துறையினரின் மின் கட்டணம், நிலைக்கட்டணம் குறைப்பு மற்றும் ஜிஎஸ்டி கோரிக்கைகள் குறித்து சட்டமன்றத்தில் பேச உள்ளேன். முதல்வர் மற்றும் தொழிற்துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தி, அடுத்த 6 மாதங்களில் உரிய தீர்வு பெற்றுத் தரப்படும். மேலும், தொகுதியில் சிப்காட் (SIPCOT) அமைக்கவும் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது" எனத் தெரிவித்தார்.

சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்