போராட்ட களத்திற்கு வருவதே முதல் வெற்றி" சிங்கபெண் SI அனிதா பெருமிதம்!
கோவை 'தி கேரளா க்ளப்' அரங்கில், அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் சார்பில் பெண்களுக்கான சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அமைப்பின் தலைவர் ஆர்.கே. குமார் தலைமையில் நடைபெற்ற இந்விழாவில், 'சிங்கபெண்' சிறப்பு பிரிவு காவல் உதவி ஆய்வாளர் அனிதா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.அப்போது பேசிய அவர், "பெண்களின் வாழ்க்கை வட்டம் குறுகியது. அவர்களைச் சாதனை பெண்களாக மாற்ற இன்னும் போராட்டங்கள் தொடர்கின்றன. பெண்களிடம் இந்நாட்டை மாற்றும் நெம்புகோல் போன்ற தன்னம்பிக்கையும், சுய தைரியமும் உள்ளது. தடைகளைத் தாண்டி பெண்கள் போராட்ட களத்திற்கு வருவதையே நான் முதல் வெற்றியாகப் பார்க்கிறேன்" எனப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.இந்நிகழ்ச்சியில் பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் சட்ட விழிப்புணர்வு குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் வழக்கறிஞர்கள் சுந்தரவடிவேலு, தேன்மொழி, டாக்டர் கதிரவன், லதா அர்ஜூனன் உட்பட கழக நிர்வாகிகள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்