கோவையில் 'பாரத் சிட்டி 007' பிரீமியம் வில்லாக்கள் அறிமுகம்: நடிகர் சத்யராஜ் திறந்து வைத்தார்!

கோவை வடவள்ளி சிறுவாணி சாலை பொங்காளியூர் பகுதியில், பாரத் இண்டஸ்ட்ரீஸ் அண்ட் குரூப் ஆஃப் கம்பெனிஸ் நிறுவனத்தின் "பாரத் சிட்டி 007" பிரீமியம் வில்லா மற்றும் வீட்டுமனைகளின் அறிமுக விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட பிரபல திரைப்பட நடிகரும் தயாரிப்பாளருமான சத்யராஜ், ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் 9.44 ஏக்கர் பரப்பளவில், 189 பிரீமியம் வில்லா மனைகளுடன் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் சென்ட்ரல் பார்க், தியான பகுதி, நடைபயிற்சி பாதை, வெளிப்புற உடற்பயிற்சி கூடம், குழந்தைகள் விளையாட்டுப் பகுதி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நவீன வசதிகள் இடம் பெற்றுள்ளன. DTCP மற்றும் RERA அங்கீகாரம் பெற்ற இந்த மனைகளுக்கு முன்னணி வங்கிகள் மூலம் 70% முதல் 90% வரை கடனுதவி வழங்கப்படுகிறது.
நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய சத்யராஜ் மற்றும் நிறுவனத்தின் தலைவர் லயன் பன்னீர்செல்வம் ஆகியோர், 40 ஆண்டுகால தொழில் அனுபவம் மற்றும் நேர்மையின் அடிப்படையில், தொலைநோக்குப் பார்வையுடன் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். இவ்விழாவில் நிறுவனத்தின் இயக்குனர் அரவிந்த் குமார் மற்றும் தொழில்துறை முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.

சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்