*கோவை கேம்ஃபோர்டு பள்ளியில் 10 அடி உயர கால்பந்துடன் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு!**
FIFA உலகக் கோப்பை போட்டியை முன்னிட்டு, கோவை கேம்ஃபோர்டு சர்வதேச பள்ளியில் (Camford International School) போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. "இலக்குகளைத் தேர்ந்தெடுங்கள், போதைப்பொருட்களை அல்ல" என்ற கருப்பொருளில், மாணவர்கள் 10 அடி உயர பிரம்மாண்ட கால்பந்து அமைப்பை வடிவமைத்து, போட்டியில் பங்கேற்கும் 48 நாடுகளின் கொடிகளை ஏந்தி விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்தனர்.
பள்ளியின் தலைவர் அருள் ரமேஷ், தாளாளர் பூங்கோதை அருள் ரமேஷ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாணவர்கள் உலகக் கோப்பை இறுதிப்போட்டி அணிகளுக்கும் வாழ்த்து தெரிவித்தனர். இந்த பிரம்மாண்ட கால்பந்து வடிவமைப்பு பள்ளி வளாகத்தில் இரண்டு நாட்களுக்குக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்