**உலக நன்மைக்காக 11 நாட்கள் தொடர் யோகா தியானம்: கோவையில் யோகா மாஸ்டர் சத்ரபதி சாதனை!**

உலக நன்மை, போரற்ற உலகம் மற்றும் தனிமனித ஒழுக்கத்தை வலியுறுத்தி, கோவையைச் சேர்ந்த பிரபல யோகா மாஸ்டர் சத்ரபதி கடந்த ஜூன் 29 முதல் ஜூலை 9 வரை 11 நாட்கள் தொடர் 'அனாசன உபவாச தியானம்' செய்து சாதனை படைத்துள்ளார். சினிமாவுக்கு வரும் முன்பே தமிழக முதல்வர் விஜய், நடிகர்கள் சூர்யா, சிலம்பரசன், குஷ்பு மற்றும் பல வெளிநாட்டு தூதரக அதிகாரிகளுக்கு யோகா பயிற்றுவித்த இவர், நிறைவு நாளில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, வெளிநாட்டினர் யோகா மூலம் 70 வயதிலும் ஆரோக்கியமாக வாழும் நிலையில், இந்தியர்கள் உடல் உழைப்பின்றி 30 வயதிலேயே பல நோய்களுக்கு ஆளாவதாகக் கவலை தெரிவித்தார். எனவே, உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பேண அனைவரும் யோகா பழக வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்