**கோவை: சரவணம்பட்டியில் அட்வான்ஸ்டு குரோஹேர் & குளோஸ்கின் நிறுவனத்தின் 150-வது கிளை திறப்பு!**
இந்தியாவின் முன்னணி முடி மீளுருவாக்கம் மற்றும் சருமப் பராமரிப்பு நிறுவனமான ‘அட்வான்ஸ்டு குரோ ஹேர் & குளோ ஸ்கின் கிளினிக்’, கோவையின் சரவணம்பட்டியில் தனது புதிய கிளையைத் துவங்கி, உலகளவில் 150 கிளைகள் என்ற முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. கோவையில் இது நிறுவனத்தின் 3-வது கிளையாகும்.
இப்புதிய கிளையை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி. சம்பத் குமார் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு திறந்து வைத்தார். கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ், தமிழக வெற்றிக் கழகத்தின் கோவை புறநகர் மாவட்ட செயலாளர் வி. ராஜ்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும், நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் மேலாண்மை இயக்குநர் சரண்வேல் ஜெயராமன் கௌரவ விருந்தினராகவும் பங்கேற்றனர்.
இங்கு அமெரிக்க US-FDA அங்கீகாரம் பெற்ற நவீன முடி மாற்று சிகிச்சைகள், லேசர் தெரபி மற்றும் மேம்பட்ட சருமப் பராமரிப்பு சிகிச்சைகள் அனுபவமிக்க மருத்துவ நிபுணர்களால் வழங்கப்படுகின்றன. திறப்பு விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு இலவச முடி மற்றும் சரும ஆலோசனை முகாம் நடைபெறுகிறது.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்