**கோவையில் பாரம்பரிய கைவினைப் பொருட்களின் ‘கிராப்ட் பஜார் 2026’ கண்காட்சி தொடக்கம்!**
கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள சுகுணா கல்யாண மண்டபத்தில், கிராப்ட் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு சார்பில் **“கிராப்ட் பஜார் 2026”** கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை ஜூலை 16 அன்று தொடங்கியது.
இக்கண்காட்சி ஜூலை 21-ம் தேதி வரை 6 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இதில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த திறன்மிக்க கைவினைக் கலைஞர்கள் மற்றும் நெசவாளர்கள் தங்களது பாரம்பரிய கலைப் பொருட்களை நேரடியாகக் காட்சிப்படுத்தி விற்பனை செய்து வருகின்றனர். நலிவடைந்து வரும் பாரம்பரியக் கலைகளை ஊக்குவிக்கவும், கலைஞர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் ஒரே கூரையின் கீழ் இந்த அரிய வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்