கோவை 3 நாட்கள் செங்கல் லாரி வேலைநிறுத்தம் – கட்டுமானப் பொருட்கள் விலை உயர வாய்ப்பு
கோவை தடாகம் பகுதியில் செங்கல் லாரி உரிமையாளர்கள் சங்கம் இன்று முதல் 3 நாட்கள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளது.
எரிபொருள், உதிரிபாகங்கள், இன்சூரன்ஸ் மற்றும் சாலை வரி உயர்வை கண்டித்து இப்போராட்டம் நடத்தப்படுகிறது. செய்தியாளர்களிடம் பேசிய சங்க நிர்வாகிகள் எஸ்பிஎம். தமிழ், பரசுராமன், டிகேஎஸ் தங்கராஜ், மோகன்குமார் ஆகியோர், "இந்த போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட லாரிகள் பங்கேற்றுள்ளன; இதனால் நாளொன்றுக்கு ₹20 லட்சம் வரை இழப்பு ஏற்படும். மேலும் 3,000 தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதுடன், கட்டுமானப் பொருட்களின் விலையும் உயர வாய்ப்புள்ளது" என்றனர்.
ஜிஎஸ்டி (GST) பில் இல்லாத நிறுவனங்களின் செங்கல்களை ஏற்றிச் செல்ல மாட்டோம்.
அதிக அபராதம் மற்றும் வாகனப் பறிமுதலைக் கண்டித்து நடத்தப்படும் இப்போராட்டத்திற்குப் பொதுமக்கள் ஆதரவு தருமாறு நிர்வாகிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்