**கோவை குமரகுரு கல்லூரியில் "யங் இந்தியன்ஸ் மாதிரி நாடாளுமன்றம் 3.0" தொடக்கம்!**

இளம் தலைமுறையினரிடம் ஜனநாயக விழிப்புணர்வு மற்றும் தலைமைத்துவ பண்புகளை வளர்க்கும் நோக்கில், சிஐஐ மற்றும் யங் இந்தியன்ஸ் இணைந்து நடத்தும் இரண்டு நாள் "மாதிரி நாடாளுமன்ற" நிகழ்ச்சியை கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தொடங்கி வைத்தார். 14 பள்ளிகளைச் சேர்ந்த 109 மாணவர்கள் பங்கேற்கும் இந்த நிகழ்வில், சிறப்பாகச் செயல்படும் 15 பேர் புதுதில்லியில் நடைபெறும் தேசிய இறுதிப் போட்டிக்குத் தேர்வு செய்யப்படுவர். எதிர்கால தலைவர்களாக உருவாக மாணவர்கள் கேட்கும் திறன் மற்றும் பரஸ்பர மரியாதையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என ஆட்சியர் வலியுறுத்தினார்.

சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்