கோவையில் 32 மாணவர்களுக்கு தலா 30,000 கல்வி ஊக்கத்தொகை விநியோகம்!
கோவை சிங்காநல்லூரில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு மற்றும் ஓபிசி மக்கள் உரிமை கட்சி சார்பில் 4-வது ஆண்டாக கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 32 மாணவ, மாணவியர்களுக்கு தலா 30 ஆயிரம் ரூபாய் காசோலையை ரூட்ஸ் குழுமங்களின் தலைவர் ராமசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய ஓபிசி கூட்டமைப்பின் தலைவர் இரத்தின சபாபதி, மாணவர்கள் சிறந்த உயர்கல்வி நிறுவனங்களைத் தேர்வு செய்யவும், நிதி ஆதாரங்கள் மற்றும் வேலைவாய்ப்புகளை அறியவும் தங்கள் அமைப்பு தொடர்ந்து வழிகாட்டும் என்றார். இவ்விழாவில் கூட்டமைப்பின் துணைச் செயலாளர் திருஞானசம்பந்தம், துணைத்தலைவர் வெள்ளியங்கிரி, வெஸ்ட்டா இயக்குநர் சேரலாதன் இராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்