**கோவை: ராயல் கேர் மருத்துவமனை சார்பில் நரம்பியல் தீவிர சிகிச்சை குறித்த 3 நாள் தேசிய கருத்தரங்கம்!**
கோவை நீலாம்பூரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில், ராயல் கேர் மருத்துவமனை சார்பில் நரம்பியல் தீவிர சிகிச்சை தொடர்பான 3 நாள் மருத்துவ கருத்தரங்கம் மற்றும் பயிற்சி முகாம் நடைபெற்றது.
மருத்துவமனைத் தலைவர் மருத்துவர் மாதேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இதன் துவக்க விழாவில் ராம் ராஜகோபாலன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். இறுதி நாளில் பக்கவாதம், மூளையில் ரத்தக்கசிவு, தலையில் ஏற்படும் காயங்கள், மூளைச்சாவு, உறுப்பு தானம் மற்றும் வலிப்பு உள்ளிட்டவை குறித்து நாடு முழுவதிலும் இருந்து வந்திருந்த மருத்துவ நிபுணர்கள் உரையாற்றினர்.
இத்தொழில்நுட்பக் கருத்தரங்கில் மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவப் பணியாளர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுப் பயனடைந்தனர். நிகழ்வில் மருத்துவர்கள் மேத்யூ ஜோசப், சிவக்குமார், பரந்தாமன் சேதுபதி, மணி செந்தில்குமார், வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்