*பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா: 543 பேருக்குப் பட்டங்கள் வழங்கல்!*
கோவை பீளமேடு பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் கணினியியல் மற்றும் அது சார்ந்த துறைகளுக்கான பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. பிஎஸ்ஜி அறக்கட்டளை அறங்காவலர் எல். கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், கல்லூரி முதல்வர் டாக்டர் பி. ஆர். தைய்லா வரவேற்புரையாற்றினார்.
இதில் பெங்களூரு இந்திய அறிவியல் கழக இயக்குநர் டாக்டர் கோவிந்தன் ரங்கராஜன் முதன்மை விருந்தினராகப் பங்கேற்று, 543 இளங்கலை மற்றும் முதுகலை பட்டதாரிகளுக்குப் பட்டங்களையும், முதலிடம் பிடித்தவர்களுக்குத் தங்கப் பதக்கங்களையும் வழங்கிச் சிறப்பித்தார். குவாண்டம் கணினியியல் மற்றும் ஏஐ யுகத்தில், சைபர் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து, தொழில்நுட்பத் திறனுடன் மனிதநேயத்தையும் பேணிக்காக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு அவர் அறிவுறுத்தினார். இந்நிகழ்வில் பேராசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பலர் கலந்துகொண்டனர்.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்