கோவையில் 8-வது தடகள சாம்பியன்ஷிப் போட்டி துவக்கம்!

மாணவர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையில், கோவை ஸ்போர்ட்ஸ் அகாடமி நடத்தும் 8-வது ஜூனியர் மற்றும் சீனியர் அத்லெட்டிக் சாம்பியன்ஷிப் போட்டி நேரு ஸ்டேடியத்தில் தொடங்கியது.
அகாடமி நிறுவனர் பரசுராம் தலைமையில் நடைபெற்ற துவக்க விழாவில், மண்டல பி.எஃப். ஆணையர் பிரணவ், சன் ஸ்மார்ட் சரவணன், ரோட்டரி கிளப் தலைவர் திருப்பதி ஆகியோர் பங்கேற்று போட்டிகளை துவக்கி வைத்தனர்.
இரண்டு நாட்கள் நடைபெறும் இப்போட்டிகளில் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட பிரிவுகளில் கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை அகாடமி நிர்வாகிகள் கிருஷ்ணகுமார், ஸ்ரீதர் ஆகியோர் செய்திருந்தனர்.

சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்