**AI & Agri-Tech ஸ்டார்ட்அப்களுக்கு ₹50 லட்சம் வரை முதலீடு: கோவையில் ‘GRG Gen Nxt’ லான்ச்பேட் போட்டி!**
கோவை ‘GRG Gen Nxt Incubator’ நிறுவனம், Startup TN உடன் இணைந்து AI மற்றும் Agri-Tech ஸ்டார்ட்அப்களுக்கான **“LaunchPad”** பிட்ச் போட்டியை அறிவித்துள்ளது. இதுகுறித்து நிறுவன சி.இ.ஓ சோன்பால் மற்றும் மேலாளர் ஹரிகிருஷ்ணன் கூறுகையில், வருவாய் ஈட்டும் நிலையிலுள்ள தொடக்க நிறுவனங்களுக்கு ஏஞ்சல் முதலீட்டாளர்கள் மூலம் ₹50 லட்சம் வரை முதலீடு மற்றும் பரிசுகள் வழங்கப்படும் என்றனர்.
இந்தியா முழுவதும் உள்ள நிறுவனங்கள் பங்கேற்கலாம் என்றாலும் கோவை மாவட்ட திறமையாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள் **ஜூலை 21**. போட்டி **ஜூலை 24** மாலை 4 மணி முதல் 7 மணி வரை நடைபெறும்.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்