புதிய பேருந்து சேவையைத் துவக்கி வைத்தார் சூலூர் எம்.எல்.ஏ என்.எம் சுகுமார்!!

கோவை மாவட்டம் சூலூர், அரசூர் ஊராட்சிக்குட்பட்ட பொத்தியாம்பாளையம் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, உக்கடம் செல்லும் புதிய பேருந்து தடம் எண்:72 சேவை துவக்கப்பட்டது. போதிய போக்குவரத்து வசதியின்றி அவதிப்பட்டு வந்த பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி இச்சேவை கொண்டு வரப்பட்டுள்ளது.தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் ஆணைக்கிணங்க, சூலூர் சட்டமன்ற உறுப்பினர் என்.எம்.சுகுமார் பொதுமக்களின் பெரும் வரவேற்பிற்கு இடையே  இப்பேருந்துசேவையை முறைப்படி துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து கழக அதிகாரிகள், வடக்கு ஒன்றிய செயலாளர் அஸ்வின், அரசூர் மகளிர் அணி நிர்வாகி சரண்யா விக்னேஷ், அரசூர் விக்னேஷ், ரஞ்சித் குமார், பூபதி, ராஜசேகர் மகளிர் அணி சந்தியா, கனகா, காவியா, மோகனாமற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் திரளாகக் கலந்து கொண்டனர். கோரிக்கையை விரைந்து நிறைவேற்றிய முதலமைச்சருக்கும், தொகுதி சட்டமன்ற உறுப்பினருக்கும் அப்பகுதி மக்கள் தங்களது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்