கோவையில் சுப்ரா யோகா கல்வி நிறுவனங்களின் முப்பெரும் விழா கோலாகலம்!
உலக யோகா தினத்தை முன்னிட்டு, கோவை பீளமேடு "கோ இந்தியா" ஹாலில் சுப்ரா யோகா கல்வி நிறுவனங்கள் மற்றும் புனர்ஜீவன் ஆயுர்வேத நிலையம் இணைந்து நடத்திய முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது.இவ்விழாவில் இயற்கை மற்றும் யோகா புத்தகங்கள் வெளியிடப்பட்டதோடு, யோகா சாதனையாளர்களுக்கு விருதுகளும், பயிற்சி முடித்த மாணவர்களுக்குப் பட்டங்களும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் டாக்டர் மு.அ. அப்பன், முத்துக்குமார், கணேஷ் பாபு, முத்துமாணிக்கம், சண்முகவேல், பேராசிரியை ரேணுகாதேவி, கல்லூரி முதல்வர் மாலா, ஓய்வுபெற்ற இணை இயக்குனர் கணேசன், கார்த்திகேயன் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.சாதனையாளர்கள் அனைவருக்கும் விருதுகளை வழங்கி, சுப்ரா யோகா கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சுப்பரமணியன் நாச்சியப்பன் சிறப்பரையாற்றினார். விழாவின் முத்தாய்ப்பாக, மாணவர்களின் வியக்கவைக்கும் யோகாசனப் பயிற்சிகள் பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தன.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்