கோவை தூய்மை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி பங்கேற்பு

கோவையில் நடைபெற்ற 'தூய்மைப் பக்வாடா' (Swachhata Pakhwada) விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மத்திய பெட்ரோலியத் துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்வில், தூய்மையான பாரதத்தை உருவாக்குவதாகவும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதாகவும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர். தொடர்ந்து, 'தாயின் பெயரில் ஒரு மரம்' திட்டத்தின்கீழ் அமைச்சர் மரக்கன்று நட்டு வைத்தார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தூய்மையின் அவசியம் குறித்து உரையாற்றிய அமைச்சர், மாணவர்கள் தூய்மைப் பணிகளை ஆண்டு முழுவதும் கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்