*கோவையில் புகைப்படக் கட்டணம் உயர்வு:ஸ்டுடியோ உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு*
கேமரா, லென்ஸ், கணினி பாகங்கள் மற்றும் AI மென்பொருட்களின் விலை உயர்வு காரணமாக கோவையில் புகைப்படக் கட்டணங்கள் உயர்த்தப்படுவதாக கோவை மாவட்ட ஸ்டுடியோ ஓனர்ஸ் அசோசியேஷன்அறிவித்துள்ளது.இதன்படி, நீண்ட காலமாக சுமார் ₹180-க்கு வழங்கப்பட்டு வந்த பாஸ்போர்ட் அளவு புகைப்படத்திற்கான கட்டணம் இனி ₹200 ஆக உயர்த்தப்படுகிறது. அண்டை மாநிலமான கேரளாவில் இதற்கு ₹350 வரை வசூலிக்கப்படும் நிலையில், கோவையில் ஸ்டுடியோ தொழிலை நஷ்டமின்றி நடத்தவும், தரமான சேவையைத் தொடரவும் இந்த குறைந்தபட்ச விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்று சங்கம் விளக்கம் அளித்துள்ளது. எனவே, பொதுமக்கள் உள்ளூர் ஸ்டுடியோக்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்