**கோவை: அண்ணாமலையின் ‘வீ த லீடர்’ மாநாட்டிற்கு தொண்டாமுத்தூரிலிருந்து திரண்ட பொதுமக்கள்!**
பாஜகவிலிருந்து விலகி அண்ணாமலை துவங்கியுள்ள ‘வீ த லீடர்’ இயக்கத்தின் முதல் மாநில மாநாடு, பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் "போதையில்லா பொள்ளாச்சி" என்ற கருத்தை மையமாக வைத்து நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக, கோவை தொண்டாமுத்தூர் ஒன்றியத்தைச் சேர்ந்த பெரியதனம் கதிர்வேல், புவியரசு, குழந்தைவேல், டிவிஎஸ் கிஷோர், கவியரசு ஆகியோர் ஏற்பாட்டில், ஜமாப் இசை முழங்க 300-க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் வாகனங்களில் அணிவகுத்துப் புறப்பட்டனர்.
புறப்படுவதற்கு முன்பாக "போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோம்" என முழக்கமிட்ட பொதுமக்கள், எந்தவொரு எதிர்பார்ப்புமின்றி மக்கள் தலைவர் அண்ணாமலையின் இயக்கத்தில் இணைந்துள்ளதாகவும், எதிர்காலத்தில் அவரது அரசியல் பயணத்திற்கு உறுதுணையாக இருந்து தமிழகத்தில் நிச்சயம் மாற்றத்தை உருவாக்குவோம் என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். இந்நிகழ்வில் முள்ளங்காடு வெள்ளிங்கிரி, பேராசிரியர் மோகன், நரசிபுரம் உதயகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்