*கோவையில் ‘கலாஷா ஃபைன் ஜுவல்ஸ்’ பிரத்யேக நகைக் கண்காட்சி தொடக்கம்!*
கேப்ஸ் கோல்ட் நிறுவனத்தின் அங்கமான ‘கலாஷா ஃபைன் ஜுவல்ஸ்’ நடத்தும் பிரத்யேக கைவினை நகைக் கண்காட்சி கோவையில் இன்று தொடங்கியது. அபர்ணா சுங்கு தேர்ந்தெடுத்து வடிவமைத்துள்ள இக்கண்காட்சியை நிறுவன உரிமையாளர் ஸ்ரவண் குமார் குடூர் மற்றும் கோவை நகரின் முக்கியப் பிரமுகர்கள் இணைந்து தொடங்கி வைத்தனர்.
இக்கண்காட்சி ஜூலை 16, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் அவிநாசி சாலையில் உள்ள ‘தி ரெசிடென்சி டவர்ஸ்’ ஹோட்டலில் நடைபெறுகிறது. இதில் மணமகள்களுக்கான ஆடம்பர நகைகள், தங்கம், வைரம், போல்கி, ஜடாவ் மற்றும் பாரம்பரிய ஆன்டிக் கோயில் நகைகளின் அரிய தொகுப்புகள் இடம்பெற்றுள்ளன. இந்திய பாரம்பரியமும் நவீன அழகியலும் இணைந்த இந்த நகைக் கண்காட்சியில் பொதுமக்களுக்குப் பிரத்யேகச் சலுகைகளும் வழங்கப்படுகின்றன.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்