பாரத மாதா நற்பணி அறக்கட்டளைக்கு, தமிழ்நாடு ஆண்டாள் பக்தர்கள் பேரவை கரம் கொடுத்தது

கோவை பாரத மாதா நற்பணி அறக்கட்டளையின் சார்பில், ஆதரவற்ற இல்லத்தில் உயிருக்கு போராடி வரும் முதியவரின் சிகிச்சைக்காக ஆக்ஸிஜன் செறிவூட்டும் கருவி மற்றும் சக்‌ஷன் கருவி தேவைப்பட்டது.இந்த வேண்டுகோளை ஏற்று, தமிழ்நாடு ஆண்டாள் பக்தர்கள் பேரவை உடனடியாக கருவியை கொடுத்தது.இந்த நிகழ்வில் ஆண்டாள் பக்தர்கள் பேரவையின் மாநில துணைத்தலைவர்கள் சக்திவேல் மற்றும் செந்தில் குமார், பாரத மாதா நற்பணிஅறக்கட்டளையின் நிறுவனர் Dr.M.கெளரி சங்கர், மற்றும் காப்பக நிர்வாகிகள் பிரின்ஸ், லதா ஆகியோர் கலந்து கொண்டனர்.



சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்