**கண்ணைக் கட்டிக்கொண்டு சிலம்பம் சுற்றி சாதனை செய்த மாணவர்கள்!**

வீடியோ லிங்க் தொடவும்
கோவை பீடம்பள்ளியில் உள்ள வளர்மதி சி.பி.எஸ்.இ பள்ளியில், ஆதித்தமிழன் வீர சிலம்பாட்ட கலைக்கூடம் மற்றும் ஸ்ரீ சுக பிரம்மா மகரிஷி வித்யா மந்திர் சர்வதேசப் பள்ளி இணைந்து நடத்திய 'நோபல் உலக சாதனை' முயற்சி விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் பங்கேற்ற மாணவர்கள், கண்ணைக் கட்டிக்கொண்டு 11 விதமான சிலம்ப சுழற்சி முறைகளை தொடர்ந்து **5 மணி நேரம் 15 நிமிடங்கள்** இடைவிடாது செய்து பிரம்மாண்ட உலக சாதனை படைத்தனர். அதேபோல, கராத்தே பிரிவில் பங்கேற்ற வீரர்கள் 6 விதமான கட்டா முறைகளை **1 மணி நேரம் 30 நிமிடங்கள்** தொடர்ந்து செய்து சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தனர்.
இந்நிகழ்வு குறித்து சிலம்ப ஆசிரியர் நாகசுந்தரம் பேசுகையில், *"மாணவர்கள் தற்காப்புக் கலைகளைக் கற்றுக்கொள்வது இன்றியமையாத ஒன்றாகும். மனநலம், உடல்நலம், கவனம் மற்றும் சகோதரத்துவத்தை வளர்க்க இத்தகைய கலைகள் பெரிதும் துணையாக இருக்கும். மேலும், தற்காப்புக் கலைகள் மூலம் பலருக்கு வேலைவாய்ப்புகளும் உருவாகி பயன் பெற்றுள்ளனர்,"* எனத் தெரிவித்தார்.
பள்ளி முதல்வர் D. பிரபா மற்றும் அறங்காவலர் N. அபிராமி ஆகியோர் விழாவைத் தொடங்கி வைத்தனர். சூலூர் சட்டமன்ற உறுப்பினர் N.M. சுகுமார் உட்படப் பல முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டு, சாதனை படைத்த மாணவர்களுக்குப் பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கி வாழ்த்தினர்.

சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்