பாக்யரா‌ஜ்அஞ்சலி செலுத்தவும் அழைப்பு விடுத்துள்ள, திரைப்பட இயக்குநர் ஆர். சுந்தர்ராஜன்.

திரைத்துறையில் பல்வேறு சாதனைகளை படைத்து, மண்ணுலகில் இருந்து விண்ணுலகம் சென்ற, நடிகர் பாக்யரா‌ஜ் நினைவுகளை பகிர்ந்து கொள்ளவும், அவருக்கு அஞ்சலி செலுத்தவும் அழைப்பு விடுத்துள்ள, திரைப்பட இயக்குநர் ஆர். சுந்தர்ராஜன்.

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குநரும், திரைக்கதை மன்னனுமான கே. பாக்யராஜ் கடந்த ஜூன் 27, 2026 அன்று தனது 75வது வயதில் சென்னையில் காலமானார்.
அவரது, மறைவுக்குத் திரையுலகினர் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்திருந்த நிலையில், நாடு முழுவதும் அவருக்கென தனி ரசிகர்கள், இருந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக கோவை, மாவட்ட பல்வேறு பகுதிகளில் அவரது ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி  வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நாளை 11.07.2026 அன்று, கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள எஸ்.என்.ஆர் திருமண அரங்கில் நடிகர் பாக்யரா‌ஜ்க்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த விழாவில் கோவை மாவட்டம் மட்டுமின்றி, கோவை மாவட்டத்தை சுற்றியுள்ள, அனைத்து பகுதிகளிலும் இருந்து, அவரது நண்பர்கள், மற்றும் ரசிகர்கள் திறலாக கலந்து கொண்டு அவருக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், இந்த விழா  ஏற்பாடு செய்யபட்டுள்ளது. இது குறித்து நடிகரும், இயக்குனருமான ஆர். சுந்தர்ராஜன் கோவை காந்திபுரத்தில் இந்த அஞ்சலி நிகழ்ச்சி குறித்து செய்தியாளர்களைசந்தித்து கூறியதாவது.. 
திரைத்துறையில் பல்வேறு சாதனை படைத்த மாமனிதர் பாக்யராஜ் அவரது மறைவை தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் சார்பாக, முழு அரசு மரியாதையுடன் சென்னை பெசன்ட் நகர் மின்மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
​"திரைக்கதை மன்னன்" பாக்யராஜ், ஒரு சாதாரண மனிதனாக இருந்து, திரையில் நாயகனாக வெல்ல முடியும் என்பதைத் தன் புத்திசாலித்தனமான, நகைச்சுவையான கதைகளின் மூலம் நிரூபித்தவர்.
பிரம்மாண்ட சண்டைக் காட்சிகள் இல்லாமல், அன்றாட குடும்ப மற்றும் சமூக எதார்த்தங்களை மையமாகக் கொண்டு விறுவிறுப்பான திரைக்கதை அமைப்பதில்  வல்லவர். அத்தகைய கலைஞரின் மறைவு நாடுமுழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்தகைய கலைஞனுக்கு அஞ்சலி செலுத்த உங்களுக்கும்  வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளோம், 
இதற்கான ஏற்பாடுகளை, சசி அட்வர்டைஸ்மென்ட் சுவாமி நாதன், முன்னாள் இயக்குனர் லயன் கேஜி, இராமமூர்த்தி, முன்னாள் ஆளுநர் மணோகரன், உள்ளிட்ட பலர் செய்துள்ளனர் எனவே அனைவரும் கலந்து கொண்டு அவரது ஆன்மா சாந்தி அடைய  ப்ராத்திப்பொம் என்று கேட்டு கொண்டார். மேலும் இந்த விழாவில் மூத்த நடிகர் சிவக்குமார், பூர்ணிமா பாக்யராஜ், நடிகர் சாந்தனு பாக்யரா‌ஜ், உள்ளிட்ட பல திரை பிரபலங்களும் அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளனர். அனைவரும் வாருங்கள் என்று கேட்டு கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்