தேசிய சிலம்பப் போட்டியில் கோவை வீரர்கள் சாதனை: எம்.எல்.ஏ என்.எம்.சுகுமார் வாழ்த்து!!
புதுச்சேரியில் தென்னிந்திய பாரம்பரிய விளையாட்டு கழகம் சார்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (28-06-26) நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பப் போட்டியில் கோவை, சூலூர், சோமனூர், கருமத்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 120 வீரர்கள் பங்கேற்றுப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.
வெற்றி பெற்ற வீரர்களை நேரில் அழைத்து பாராட்டிய சூலூர் சட்டமன்ற தொகுதி தவெக எம்.எல்.ஏ மாண்புமிகு திரு. NM.சுகுமார் அவர்கள், அனைவருக்கும் விருதுகள் மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கி கௌரவித்தார். "விளையாட்டு வீரர்கள் வெற்றியின் போது பணிவோடும், தோல்வியின் போது தன்னம்பிக்கையோடும் செயல்பட்டு நாட்டின் பெருமையை உயர்த்த வேண்டும்" என அவர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்