கோவை: மாவட்ட அளவிலான தற்காப்பு கலை போட்டி!
கோவை செட்டிபாளையத்தில், தொண்டாமுத்தூர் தெற்கு ஒன்றிய கலை மற்றும் கலாச்சார அணி சார்பில் மாவட்ட அளவிலான தற்காப்பு கலை போட்டி கடந்த ஞாயிறன்று நடைபெற்றது.இப்போட்டியை தொண்டாமுத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் திரு. விஜய் துவக்கி வைத்து, வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பதக்கங்களை வழங்கிப் பாராட்டினார். ஒன்றிய நிர்வாகிகள் கலந்துகொண்டு சான்றிதழ்களை வழங்கினர்.500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற இப்போட்டியினை 'தி கோல்டன் ஸ்டார்ஸ் அகாடமி' நிறுவனர் திரு. சதீஸ் மற்றும் பயிற்சியாளர்கள் சேகர், சபரீஷ், பால மணிகண்டன் ஆகியோர் முன்னின்று நடத்தினர்.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்