# 🔴 வ.உ.சி. பிறந்தநாள் விழா & கோரிக்கைகள்: கோவையில் வேளாளர் வெள்ளாளர் பேரியக்கம் ஆலோசனை கூட்டம்!

கோவை குறிச்சி பகுதியில் உள்ள அருள்மிகு சேரமான் பெருமாள் நாயனார் வழிபாட்டு மண்டபத்தில், கோவை மாவட்ட ஒருங்கிணைந்த வேளாளர் வெள்ளாளர் பேரியக்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 155-வது பிறந்தநாள் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், வ.உ.சி. அவர்களை இழிவாகப் பேசிய விவகாரத்தில் ஆதித்யா தொலைக்காட்சி உடனடியாகப் பொது மன்னிப்பு கேட்க வேண்டும், தவறினால் தலைமை அலுவலகம் முற்றுகையிடப்படும் என எச்சரிக்கப்பட்டது.
தொடர்ந்து, 42 உட்பிரிவுகளையும் ஒருங்கிணைத்து 'வேளாளர் இனம்' என அரசாணை வெளியிட வேண்டும், செப்டம்பர் 5-ஆம் தேதியை வழக்கறிஞர் தினமாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்