**கோவை இண்டஸ்ட்ரியல் சிட்டி ரோட்டரி கிளப் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு!**

ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் இண்டஸ்ட்ரியல் சிட்டியின் 2026-27ஆம் ஆண்டிற்கான புதிய தலைவராக ஓய்வுபெற்ற ஜி.எஸ்.டி உதவி ஆணையர் டோலா திருப்பதியும், செயலாளராக விக்ரமும் பொறுப்பேற்றுக்கொண்டனர். முன்னாள் தலைவர் சண்முகராஜ் தனது பொறுப்புகளைப் புதிய குழுவிடம் ஒப்படைத்தார்.
புதிய தலைவர் டோலா திருப்பதி பேசுகையில், "இந்த ஆண்டு புவி வெப்பமயமாதல் தடுப்பு, இ-வேஸ்ட் மேலாண்மை, சமூக சமையலறை மற்றும் பழங்குடியின மக்களுக்கான வீட்டு வசதித் திட்டம் ஆகியவற்றில் தீவிர கவனம் செலுத்தப்படும். மேலும், நான் எழுதியுள்ள 'பிளைண்டிங் செலிப்ரேஷன்' புத்தக வருவாயில் 40% பார்வையற்றோர் பள்ளிக்கு நன்கொடையாக வழங்கப்படும்" எனத் தெரிவித்தார். இந்நிகழ்வில் ரோட்டரி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு வாழ்த்தினர்.

சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்