கோவை ரோட்டரி கிளப் ஆஃப் ரைஸ்: புதிய நிர்வாகிகள் பதவியேற்பு & நலத்திட்ட உதவிகள்!*
கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் நடைபெற்ற விழாவில், 'கோயம்புத்தூர் ரோட்டரி கிளப் ஆஃப் ரைஸ்' அமைப்பின் முதலாண்டு நிறைவு விழா மற்றும் 2026-2027-ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் தலைவராக மகேஸ்வரன், செயலாளராக சரவணன், பொருளாளராக அருண்பிரசாத் ஆகியோர் பதவியேற்றனர்.
விழாவின் ஒரு பகுதியாக கே.கே.புதூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கணிப்பொறிகள், ஏழை குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் பேமிலி கேர் சில்ரன்ஸ் அறக்கட்டளைக்கு அன்னதானம் போன்ற சமூக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இவ்விழாவில் ரோட்டரி மாவட்ட நிர்வாகிகள் காட்வின், சுவாமிநாதன், ராமகிருஷ்ணன் மற்றும் பிரகாஷ் குட்டப்பன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு வாழ்த்தினர்.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்