# 🔴 கோவையில் ‘வோக் மாடல்’ நிறுவனம் நடத்திய பிரமாண்ட ஆணழகன் போட்டி


கோவை குனியமுத்தூரில் உள்ள தனியார் அரங்கில், வோக் மாடல் நிறுவனம் சார்பில் ஆணழகன் போட்டி சிறப்பாக நடைபெற்றது. இதில் கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்துகொண்டு தங்களது உடற்கட்டமைப்புத் திறமைகளை வெளிப்படுத்தினர்.
பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு **"கோவை ஃபேஷன் குரு"** பட்டம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய நிறுவனத்தின் தலைவர் **சில்பா சீதாராமன்**, "கடந்த 5 ஆண்டுகளில் 1000-க்கும் மேற்பட்ட மாடல்களை உருவாக்கியுள்ளோம். அடுத்தபடியாக அரையிறுதிப் போட்டி நடக்கவுள்ளது. பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் எங்கள் நிறுவனம் செயல்பட்டு வருகிறது," என்றார். இந்நிகழ்வில் நடுவர்கள், மாடல்கள் மற்றும் செரி மேக் ஓவர் நிறுவனத்தினர் கலந்து கொண்டனர்.

சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்