கோவைரோட்டரி ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு - புதிய சேவை திட்டங்கள் அறிவிப்பு!
கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி அரங்கில், ரோட்டரி மாவட்டம் 3206-ன் புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பதவி ஏற்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர், சர்வதேச ரோட்டரி இயக்குனர் முருகானந்தம் மற்றும் நிர்வாகிகள் செல்லாராகவேந்திரன், ராஜசேகர், சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை வாழ்த்தினர்.
புதிய ஆளுநராகப் பொறுப்பேற்ற ஆர்.எஸ்.மாருதி பேசுகையில், கோவை மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களைத் தத்தெடுத்து மேம்படுத்த உள்ளதாக அறிவித்தார். மேலும், 'போதையில்லா கோயம்புத்தூர்', ஆரோக்கியமான சமுதாயம், பெண்கள் மேம்பாடு மற்றும் இயற்கையைப் பாதுகாக்கப் புதிய ரோட்டரி கட்டமைப்பு போன்ற பல்வேறு நலத்திட்டங்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்படுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார். சமுதாய மேம்பாட்டிற்கு இதுபோன்ற அமைப்புகளின் தேவை மிக முக்கியமானது என்று கிருஷ்ணராஜ் வானவராயர் விழாவில் பாராட்டிப் பேசினார்.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்