**சூலூரில் மாற்றுத்திறனாளி குழந்தைகளின் போதைப்பொருள் எதிர்ப்பு பேரணி: பொதுமக்கள் நெகிழ்ச்சி!**
சூலூர் காவல் நிலையம் பின்புறம் இயங்கி வரும் **'அருணாலயம் கல்வி அறக்கட்டளை மற்றும் கற்றல் மையம்'** நிறுவனர் திருமதி. அருணா முத்துக்குமார்ஆதரவற்ற மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு இலவசக் கல்வி, தெரபி மற்றும் ஏழை மக்களுக்கு மாதந்தோறும் மளிகைப் பொருட்களை வழங்கி பல்வேறு சமூக சேவைகளைச் செய்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, சூலூர் காவல் ஆய்வாளர் பிரேம் ஆனந்த்அவர்கள் தலைமையில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் அருணாலயம் மையத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மற்றும் ஆட்டிசம் குழந்தைகள் திரளாகக் கலந்துகொண்டனர்.
சூலூர் காவல் நிலையத்தில் துவங்கிய இப்பேரணி தாலுக்கா அலுவலகம், நீதிமன்றம், யூனியன் அலுவலகம் வழியாக விழிப்புணர்வு முழக்கங்களுடன் சென்றது. சமூகப் பொறுப்புடன் களம் இறங்கிய மாற்றுத்திறனாளி குழந்தைகளின் இந்த வீதி உலா, சூலூர் பொதுமக்களிடையே பெரும் வியப்பையும் பாராட்டையும் பெற்றது.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்