அரசுப் பள்ளிக்கு "நாப்கில் ஸ்மார்ட்பின்" இயந்திரம்: ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் அசத்தல்!
கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள், பெண்களின் சுகாதாரத்திற்காக நாப்கில் ஸ்மார்ட்பின்"என்ற சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரத்தை உருவாக்கியுள்ளனர். மின்சாரம் தேவையின்றி முழுமையாக சோலார் மூலம் இயங்கும் இந்த இயந்திரம், பயன்படுத்தப்பட்ட நாப்கின்களைப் பாதுகாப்பாக எரித்து சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வு கண்டுபிடிப்பு, சித்தாபுதூர் மாநகராட்சி பெண்கள் உயர்நிலைப் பள்ளிக்கு வழங்கப்பட்டது.
இயந்திரத்தை அர்ப்பணித்து பேசிய கோவை மாநகராட்சி ஆணையர் **திரு. கட்டா ரவி தேஜா, ஐ.ஏ.எஸ்**, பெண்களின் உடல்நலம் மற்றும் கழிவு மேலாண்மைக்கு உதவும் மாணவிகளின் இந்த புதுமையான சமூகக் கண்டுபிடிப்பு மிகவும் பாராட்டுக்குரியது என்றார். இந்நிகழ்ச்சியில் எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாகிகள், மாநகராட்சி முதன்மைக் கல்வி அலுவலர் **திரு. ஆர். குணசேகரன்** மற்றும் கல்லூரி முதல்வர் **முனைவர் கி. சித்ரா** ஆகியோர் கலந்துகொண்டு மாணவிகளின் உன்னத முயற்சியைப் பாராட்டினர்.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்