**கோவையில் தினசரி இலவச மருத்துவ முகாம்: "ஆரோக்கியமான கோவை" திட்டம் தொடக்கம்!**
கோவை மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில், கேலக்ஸி ஹெல்த் இன்சூரன்ஸ், ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் ஸ்வஸ்திக் மற்றும் ஸ்வஸ்திக் அறக்கட்டளை இணைந்து "ஆரோக்கியமான கோவை" என்ற சுகாதார விழிப்புணர்வு திட்டத்தை ஆர்.எஸ்.புரத்தில் தொடங்கின.
இத்திட்டத்தின் கீழ் 2026-27 ஆம் ஆண்டில் கோவையின் பல்வேறு பகுதிகளில் தினமும் இலவச உடல்நலப் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இதில் இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, பாடி மாஸ் இண்டெக்ஸ் (BMI) உள்ளிட்ட பரிசோதனைகள் இலவசமாக செய்யப்பட்டு 'கேலக்ஸி ஹெல்த் ஸ்கோர்' வழங்கப்படும். நோய் வரும் முன் காப்பதே சிறந்தது என வலியுறுத்தி, இந்த முகாம்கள் மூலம் பொதுமக்கள் பயனடையுமாறு ரோட்டரி மற்றும் மருத்துவ அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்