தரம், சேவைக்கு வழங்கப்படும் முக்கியத்துவத்தைடிஜிட்டல் அபாய தடுப்பு நடவடிக்கைக்கு தொழில்துறையினர் வழங்க வேண்டும் ‘சிஐஐ’ கருத்தரங்கில் வல்லுநர்கள் அறிவுரை.
இந்திய தொழில்கள் கூட்டமைப்பு(சிஐஐ) கோவை சார்பில், டிஜிட்டல் அபாயத்தை வணிக மீள்திறனாக மாற்றுதல் என்ற தலைப்பில் கருத்தரங்கு கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டல் வளாகத்தில் வியாழக்கிழமை நடந்தது.இந்திய அரசின் மின்னியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இயக்குநர் சஞ்சய் பாஹி தொடக்க விழாவில் பேசும் போது, டிஜிட்டல் அபாயம் இன்றைய வணிக நடவடிக்கைகளில் அடிப்படை மேலாண்மை செயலாக மாறியுள்ளது.டிஜிட்டல் அபாயத்தை வணிக மீள்திறனாக மாற்ற தேவையான நடவடிக்கைகளை தொழில் நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும். உடனடி நடவடிக்கை, தொடர் கற்றல் போன்ற நடவடிக்கைகள் டிஜிட்டல் அபாயத்தில் இருந்து தற்காத்து கொள்ள மிகவும் உதவும். என்றார்.இந்திய தொழில்கள் கூட்டமைப்பு(சிஐஐ) கோவை கிளை தலைவர் நவ்சாத் பேசும் போது, தொழில் நிறுவனங்கள் சிறந்து விளங்க தரம், சேவை மற்றும் உறவுமுறை எத்தகைய அளவு முக்கியத்துவம் பெற்றுள்ளதோ அதே போன்று டிஜிட்டல் நம்பிக்கையும் மிக முக்கியமானதாக உருவெடுத்துள்ளது. எனவே தொழில் நிறுவனங்கள் டிஜிட்டல் அபாயத்தை சிறந்த முறையில் கையாள கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். என்றார்.
கருத்தரங்கு தலைவர் குணசேகரன், சிஐஐ கோவை துணைத் தலைவர் மகாலிங்கம் ராமசாமி, ரிலையன்ஸ் நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரி துர்கா பிரசாத் துபே உள்ளிட்டோர் பேசினர்.150-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனத்தினர் கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்