**கோவையில் 'Move Through Math' நூல் வெளியீடு: நடன அசைவுகளில் கணிதம்**
உடல் அசைவுகள் மற்றும் பரதநாட்டியம் மூலம் 5 - 10 வயதுக் குழந்தைகளுக்குக் கணிதத்தைக் கற்றுக்கொடுக்கும் 'Move Through Math' நூல் கோவையில் வெளியிடப்பட்டது. ஜெர்மனியைச் சேர்ந்த பொறியாளரும் பரதநாட்டியக் கலைஞருமான டாக்டர் ஜனனி சுரேஷ் ராம் எழுதிய இந்நூலை, கலைஞர் ராதே ஜக்கி மற்றும் கல்வியாளர் மணிமேகலை மோகன் ஆகியோர் வெளியிட்டனர். வடிவங்கள், அளவீடு உள்ளிட்ட 46 அடிப்படைக் கணிதக் கருத்துகளை மகிழ்ச்சியான செயல்பாடுகள் மூலம் விளக்கும் வகையில் 9 அத்தியாயங்களுடன் இந்நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்