*கோவையில் MSME தொழில்முனைவோருக்கான ஏற்றுமதி விழிப்புணர்வு கருத்தரங்கம்!**
கோவை மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில், சிறு குறு மற்றும் நடுத்தர (MSME) தொழில் நிறுவனங்களின் உற்பத்திப் பொருட்களை நாடு முழுவதும் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சண்முக சிவா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்று, ஏற்றுமதி உரிமங்கள், சான்றிதழ்கள் பெறுவது மற்றும் பணப் பரிவர்த்தனை நடைமுறைகள் குறித்து விளக்கம் அளித்தனர். சிறு, குறு தொழிலாளர்கள் ஏற்றுமதியாளர்களாக மாறினால் மட்டுமே கோவை மாநகரின் வளர்ச்சி மேலும் பெருகும் என இதில் வலியுறுத்தப்பட்டது.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்