தமிழக வெற்றி கழகம் தலைமையிலான ஆட்சி சிறப்பாக அமைய 108 திருவிளக்கு பூஜை
ஆடி வெள்ளியை முன்னிட்டு அனைத்து அம்மன் ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக கோவை புறநகர் வடக்கு மாவட்ட தமிழக வெற்றி கழக கட்சி சார்பில் தமிழகத்தில் தமிழக வெற்றி கழகம் கட்சி தலைமையிலான ஆட்சி சிறப்பாக நடைபெறவும் மழை வேண்டியும் 108 திருவிளக்கு வழிபாடு நடைபெற்றது.கோவை மருதமலை சாலை லாலி ரோடு பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற திருவிளக்கு வழிபாட்டில் திரளான பெண்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக அக்கட்சியின் கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சியில் அர்ச்சகர் கிரிஷ் தமிழ் முறைப்படி வேத மந்திரங்கள் வாசிக்க திருவிளக்கு வழிபாட்டில் பங்கேற்ற பெண்கள் விளக்கேற்றி சிறப்பான ஆட்சி நடைபெறவும் மும்மாரி மழை பொழியவும் வேண்டி வழிபாடு நடத்தினர்.மேலும் இந்த திருவிளக்கு வழிபாட்டில் பங்கேற்ற பெண்களுக்கு மஞ்சள் குங்குமம் உள்ளிட்ட மங்கள பொருட்களும் சேலை உள்ளிட்ட பரிசு பொருட்களும் வழங்கப்பட்டன.தொடர்ந்து செய்தியாளர்களிடையே பேசிய அர்ச்சகர் கிரிஷ், தமிழகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் சிறப்பான ஆட்சி நடைபெறுவதாகவும் ஆடி மாதத்தில் கொண்டாடப்படும் ஆடிப்பெருக்கு விழாவிற்காக தமிழகத்திற்கு தண்ணீர் விட மாட்டோம் என்று கர்நாடக அரசு கூறிவந்த நிலையில் அங்கு மழை பெய்ததன் காரணமாக அம்மாநில அரசே தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட்டதற்கு நல்ல ஆட்சி நடைபெறுவதே காரணம் என்றும் கூறினார். மேலும் தமிழில் மீதான பற்றுதல் காரணமாகவே தமிழை மையமாகக் கொண்டு தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை விஜய் துவங்கியதாகவும் லஞ்ச லாவண்யம் இல்லாத ஒரு சிறந்த ஆட்சியை முதலமைச்சர் தந்து கொண்டிருப்பதாகவும் பெருமிதம் கொண்டார்.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்