ஜே.சி.டி. கல்லூரி மாணவர்களின் புத்தாக்க சாதனை: 150 AI முகவர்களுடன் இயங்கும் ‘Smart Campus ERP!!
கோயம்புத்தூர் ஜே.சி.டி. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் CSE துறை இரண்டாம் ஆண்டு மாணவர்கள் சஞ்சய் கிருஷ்ணன் மற்றும் பரத் ராஜ் ஆகியோர், அதிநவீன Agentic AI தொழில்நுட்பத்தைக் கொண்டு “Smart Campus ERP” என்ற புத்தாக்கத் திட்டத்தை உருவாக்கிக் அசத்தியுள்ளனர்.
மனித தலையீடு இல்லாமல் வளாக நிர்வாகப் பணிகளைத் தன்னிச்சையாக மேற்கொள்ளும் வகையில் முதற்கட்டமாக AI முகவர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மாணவர் சேர்க்கை, வருகைப் பதிவு, கட்டண மேலாண்மை மற்றும் மாணவர்களுக்கான 'Personalized Learning Engine' போன்ற சிறப்பம்சங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
இதன் அடுத்த கட்டமாக கல்வி, நூலகம், விடுதி உள்ளிட்ட அனைத்துச் செயல்பாடுகளையும் உள்ளடக்கிய **150 AI முகவர்களுடன்** இயங்கும் முழுமையான அமைப்பை உருவாக்க கல்லூரி நிர்வாகம் முழு ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்துள்ளது. மாணவர்களின் இந்த சாதனைக்குக் கல்லூரித் துணைத் தலைவர் கெளதமன் ராஜமாணிக்கம், செயலாளர் ஆர். துர்காசங்கர், முதல்வர் டாக்டர் எஸ். மனோகரன் மற்றும் துறைத் தலைவர் சக்தி விநாயகம் ஆகியோர் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்