கோவையில் "ஃபேர்ப்ரோ 2026" பிரம்மாண்ட வீட்டுமனை கண்காட்சி: ஆக. 7 முதல் 9 வரை நடைபெறுகிறது
கிரெடாய் கோவை அமைப்பு சார்பில், 'ஃபேர்ப்ரோ 2026' சொத்துக் கண்காட்சி மற்றும் விற்பனைத் திருவிழா ஆகஸ்ட் 7, 8 மற்றும் 9 ஆகிய மூன்று நாட்கள் கோவை கொடிசியா வளாக ஹால்-டி அரங்கில் நடைபெறுகிறது.
கோவையின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் பங்கேற்கும் இக்கண்காட்சியில், 35-க்கும் மேற்பட்ட கட்டுமான நிறுவனங்களின் 100-க்கும் அதிகமான குடியிருப்புத் திட்டங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் மனைகள் இடம்பெறுகின்றன. முன்னணி வங்கிகள் பங்கேற்பதால் உடனடி வீட்டுக் கடன் வசதியும், கண்காட்சி நாட்களில் பிரத்யேக சிறப்புச் சலுகைகளும் வழங்கப்படுகின்றன. கனவு இல்லத்தை நனவாக்க விரும்பும் பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்