கோவையில் இந்தியன் பாரா கிரிக்கெட் லீக் 3.0 வீரர்கள் ஏலம்!

உலகிலேயே முதன்முறையாக நேரடியாக நடத்தப்பட்ட ‘இந்தியன் பாரா கிரிக்கெட் லீக் 3.0’ மாற்றுத்திறனாளி வீரர்கள் ஏல நிகழ்ச்சி, கோவை புரூக்ஃபீல்ட்ஸ் வணிக வளாகத்தில் கோலாகலமாக நடைபெற்றது. ரோட்டராக்ட் கிளப் ஆஃப் கோயம்புத்தூர் காலக்ஸி மற்றும் தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் கிரிக்கெட் சங்கம் இணைந்து நடத்தும் இப்போட்டியில், நாடு முழுவதிலும் இருந்து பங்கேற்ற 113 மாற்றுத்திறனாளி வீரர்களில் 60 பேர் நான்கு அணிகளால் ஏலத்தில் தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் ரேஜிங் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வியானை வீணை பள்ளியும், டெல்லி யூனிகார்ன்ஸ் அணியை ரோட்டரி யூனிகார்ன்ஸும், கொல்கத்தா தண்டர் வாரியர்ஸ் அணியை 365 ஜாப் ரெடி ஆன்லைன் அகாடமியும், தமிழ்நாடு டவுன்டவுன் டைகர்ஸ் அணியை ரோட்டேரியன் காட்வின் மரியா விஸ்வாசமும் ஏலத்தில் எடுத்தன.
மாற்றுத்திறனாளி வீரர்களுக்குச் சம வாய்ப்பும் அங்கீகாரமும் வழங்கும் இப்போட்டித் தொடர், வரும் செப்டம்பர் 4, 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் கோவை சரவணம்பட்டியில் உள்ள '22 யார்ட்ஸ்' கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வை ரோட்டராக்டர் மிதுன் மற்றும் ரோட்டராக்டர் ஜெயா கிஷோர் ஆகியோர் தலைமை தாங்கி நடத்தினர். இதில் அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள் மற்றும் ரோட்டரி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

சம்பத்திய வீடியோக்கள்
சம்பத்திய செய்தி வீடியோ
முக்கிய அப்டேட்
சிறப்பு பேட்டி
பிரேக்கிங் நியூஸ்